உத்திரமேரூர் - Uthiramerur

ஸ்ரீபெரும்புதூரில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்

ஸ்ரீபெரும்புதூரில் சாலையை மறித்து நிற்கும் மாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சியில் கால்நடைகளை வளர்ப்போர், தங்களின் மாடுகளை கொட்டகை அமைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுகின்றனர். அவை, போந்துார் பேருந்து நிறுத்தம் அருகே, பிரதான சாலையை மறித்து நிற்கின்றன. இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேலும், மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு, சாலையின் குறுக்கும், நெடுக்குமாக திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி சென்று மாடுகள் முட்டுவதால், ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாகவும், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை மறித்து நிற்கும் மாடுகளை பிடித்து, கோசாலையில் ஒப்படைக்க, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా