சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

53பார்த்தது
சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவை ஒட்டி தமிழ்நாட்டின் பல நகரங்களில் இருந்து 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SETC சார்பில் வரும் 15ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 16ம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து படுக்கை வசதி, மிதவை பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு மற்றும் விபரங்களை http://tnstc.in மற்றும் TNSTC செயலி மூலம் அறியலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி