டெங்கு பாதிப்பால் நடப்பாண்டில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 20,138 பேர் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்துள்ளனர். டெங்கு இறப்புகள் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. டெங்கு தொடர்பான இறப்புகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.