உத்திரமேரூர் - Uthiramerur

ஸ்ரீபெரும்புதூரில் 100 நாள் வேலை வழங்க பி. டி. ஓ., விடம் மனு

ஸ்ரீபெரும்புதூரில் 100 நாள் வேலை வழங்க பி. டி. ஓ., விடம் மனு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சி, திருமங்கலம் கண்டிகையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள், நிறுத்தப்பட்ட நூறு நாள் வேலையை மீண்டும் வழங்க கோரி, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானியிடம் நேற்று மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது:திருமங்கலம் கண்டிகை பகுதியினர் அனைவரும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தோம். ஐந்து மாதங்களுக்கு மேலாக பணி வழங்கப்படவில்லை. இதுவரை 10 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து, நூறு நாள் வேலை வழங்கும் அதிகாரிகளிடம் கேட்டால், அரசிடம் போதிய பணம் இல்லாததால், வேலை நிறுத்தப்பட்டுள்ளது என்கின்றனர். அதேபோல கிராமத்தில் நூறு நாள் பணி மேற்கொள்ள இடம் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.அருகே உள்ள அனைத்து கிராமங்களிலும், நூறு நாள் வேலை நடைபெற்று வருகிறது. எங்கள் கிராமத்தில் மட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே, உயர் அதிகாரிகள் எங்களுக்கு மீண்டும் நூறு நாள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானியிடம் கேட்ட போது, 'பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా