அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் திருநங்கைகள் மனு

77பார்த்தது
மது போதையில் பெண்களிடம் சில்மிஷம் செய்த இளைஞர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நெற்குணம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருநங்கை மது மற்றும் அவரது சகோதரி சினேகா இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த வினோத் என்பவர் அவரது உறவினர்கள் வள்ளுவன், ஆதவன் ஆகிய மூவரும் அவ்வழியே சென்ற திருநங்கை மது மற்றும் அவரது சகோதரி சினேகா ஆகிய இருவரையும் மது போதையில் இருந்த இளைஞர்கள் அந்தப் இரு பெண்களிடம் தவறான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த ஆடையை கிழித்துள்ளனர். 

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் காவல் நிலையம் வந்து புகார் அளித்துள்ளனர். மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநங்கை மற்றும் அவரது சகோதரி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்த அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி