கிரஷ்சரில் வேலை செய்தவர் மயங்கி விழுந்து பலி.

568பார்த்தது
கிரஷ்சரில் வேலை செய்தவர் மயங்கி விழுந்து பலி.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை வயது 50.

இவர் செங்கல்பட்டு மாவட்டம் மங்களம் ஊராட்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல் உடைக்கும் கிரஷ்சரில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஜீன் மாதம் ஐந்தாம் தேதி பணியில் இருந்தபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது உடன் வேலை பார்த்த சக ஊழியர்கள் அவரை ஓய்வு அறைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்து அவரை தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.

பின்பு சில மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது ஏழுமலை மூச்சு, பேச்சு இன்றி இருந்துள்ளார். உடன் 108 ஆம்புலன்ஸ் க்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்துவிட்டதாக கூறியதாக தெரிகிறது.

பின்பு படாலம் போலீசாருக்கு தகவல் கொடுக்க பட்டது. அவர்கள் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி