சித்தர்கள் திருநாள் அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

80பார்த்தது
ஏழாவது சித்தர் திருநாள் அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பிலும் மத்திய சித்த மருத்துவ குழுமம் சார்பிலும் ஏழாவது சித்தர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாமதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழாவது சித்தர் திருநாள் கொண்டாடப்பட்டது.

அந்த மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர் கிரிஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சித்தர்கள் குறித்தும், சித்த மருத்துவத்தில் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு, துண்டு பிரதிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் இங்குள்ள மூலிகை செடிகளை மக்கள் பார்வையிடவும் அதன் நன்மைகளை தெரிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you