பினாயூர் குடியிருப்புகளை சுற்றித் திரியும் மயில்கள்

164பார்த்தது
பினாயூர் குடியிருப்புகளை சுற்றித் திரியும் மயில்கள்
உத்திரமேரூர் சுற்றி உள்ள காவணிப்பாக்கம், பட்டா, பினாயூர், பழவேரி புத்தளி, மலையாங்குளம் உள்ளிட்ட கிராமங்களில், குடியிருப்பு மற்றும் வயல்வெளிகளில் மயில்கள் சாதாரணமாக சுற்றி திரிவதை தினமும் காண முடிகிறது.


இதுகுறித்து, பினாயூர் கிராமத்தினர் கூறியதாவது:

கடந்த ஆண்டுகளில், இப்பகுதிகளில் மயில்களை காண்பது அரிதாகும். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒன்றிரண்டு மயில்கள் மட்டும் காண முடியும்.

ஆனால், ஓராண்டாக வீட்டின் பின்புறம், சாலையோர நிலங்களில் கோழிகளை போல மயில்கள் இரை தேடுவதை காண முடிகிறது.

மாலை நேரங்களில் தண்ணீர் தேடி குடியிருப்புகளுக்கு மயில்கள் படையெடுக்கிறது. பினாயூர், பட்டா, பழவேரி, காவணிப்பாக்கம் உள்ளிட்ட மலை மற்றும் மலை சார்ந்த காட்டுப் பகுதிகளில் மயில்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அதன் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி