திருப்போரூரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஓ. எம். ஆர். , சாலை ஓரம் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகின்றன.
எனினும், சில இடங்களில் பணிகள் முடிக்கப்படாமல் விடுபட்டுள்ளன.
அந்த வகையில், திருப்போரூர் ஓ. எம். ஆர். , சாலை, ஏரிக்கரை சாலை இணையும் இடத்தில், மழைநீர் வடிகால்வாய் இணைக்காமல் விடப்பட்டிருந்தது.
இதனால், ஏற்கனவே அமைத்த கால்வாயில் கழிவுநீர் குளம் போல தேங்கியது.
கால்வாயில் குளம்ேgபோல் தேங்கிய கழிவுநீர், நாளுக்கு நாள் அதிகரித்து, கால்வாயிலிருந்து வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதனால், அந்த வழியாக செல்லும் மக்கள், அதிலேயே நடந்து செல்வதுடன், துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுதொடர்பாக, நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் பணியை துவக்கியுள்ளனர்.
பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் எடுக்கப்பட்டு, அடுத்தக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.