வெண்பாக்கம் கன்னியம்மன் கோவிலில் கத்தி ஏறுதல் திருவிழா

66பார்த்தது
வெண்பாக்கம் கன்னியம்மன் கோவிலில் கத்தி ஏறுதல் திருவிழா
சிங்கபெருமாள் கோவில் அடுத்த வெண்பாக்கம் கிராமத்தில், கன்னியம்மன் கிராம தேவதை கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் அம்மனுக்கு கூழ்வார்த்தல் மற்றும் கத்தியேறுதல் திருவிழா விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டும், திருவிழாவை கோலாகலமாக நடத்த கிராம மக்கள் கூடி முடிவு செய்தனர். இதையடுத்து, கடந்த 19ம் தேதி, அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து, 26ம் தேதி கன்னி பூஜை மற்றும் பூக்கூடை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை, அம்மனுக்கு அபிஷேகமும், மதியம் திருக்குடங்கள் வீதி உலாவும் நடந்தன.

மாலையில், கத்தி ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அருள் வந்த பக்தர்கள், பக்தி பரவசத்துடன், வரிசையாக வைக்கப்பட்டு இருந்த, 21 கத்திகளில் ஏறினர்.

இதில், சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 1, 000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். அதே போல, ஆப்பூர் கிராமத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலிலும், நேற்று மாலை கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது.

தொடர்புடைய செய்தி