செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை, 41 கி. மீ. , நீளம் கொண்டது. இந்த சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, 448 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, 75 சதவீத பணிகளுக்கு மேல் நிறைவடைந்து உள்ளன.
இந்த சாலையில், பாலுார் - சிங்கபெருமாள் கோவில் சந்திப்பில், பணிகள் நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கற்கள் சிதறி புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைகின்றனர். இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
புழுதி அதிக அளவில் பறப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ - மாணவியர் கண் எரிச்சல், சுவாச பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களில் செல்லும் போது கண்களில் புழுதி படுவதால், கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, புழுதி பறப்பதை தடுக்க, சாலை பணிகள் நடைபெறும்இடங்களில் தண்ணீர் ஊற்றியும், பள்ளி அருகே சாலையோரம் படிந்துள்ள மணல் திட்டுக்களை அகற்றவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.