பி. டி. ஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

58பார்த்தது
பி. டி. ஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், வயலூர் கிராமத்தில் 170 நரிக்குறவர் குடும்பத்தினர் உள்ளனர். இப்பகுதியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2 மாதங்களாக பணி வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று, (செப் 28) அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர். தங்களுக்கு நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து, அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அவர்களிடத்தில் சமாதானம் பேசி, சில தினங்களில் நூறு நாள் வேலை வழங்குவதாக அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி