மருத்துவமனை கட்டடத்தில் வளர்ந்து வரும் ஆலமரக்கன்று

680பார்த்தது
மருத்துவமனை கட்டடத்தில் வளர்ந்து வரும் ஆலமரக்கன்று
வாலாஜாபாத் அரசு மருத்துவமனை வளாகத்தில், யுனானி கட்டடம் உள்ளது.

இந்த கட்டடத்தில், சித்த மருத்துவ பிரிவு சார்பில், யோகா பயிற்சி செய்வதற்கு, 3. 75 லட்சம் ரூபாய் செலவில், வண்ணம் அடித்து கட்டடம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, பொதுப்பணி துறையினர், கட்டடத்தின் மீது வளர்ந்து வரும் ஆலமரக் கன்றை அகற்றாமல், கட்டடத்தில் பின்புறம் வண்ணம் அடிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.

மேலும், மருத்துவமனை வளாகம் வருவோருக்கு, அரைகுறையாக வண்ணம் அடித்த விபரம் தெரியாது. ஆனால், வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்திற்கு வருவோருக்கு தெரியும்.

எனவே, வாலாஜாபாத் யுனானி கட்டடத்தின் மீது வளர்ந்து வரும் ஆலமரக் கன்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி