பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தனது காதல் அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், “நான் சினிமாத் துறையில் நுழைந்தபோது, ஒருவரை காதலித்தேன். ஆரம்பத்தில், எல்லாம் நன்றாகத் தோன்றியது. அதன்பின், அவர் என் வாழ்க்கையை துயரமாக்கினார். காதலில் விழுவது இனிமையானது, ஆனால் பிரிவின் வலி இரு மடங்கு மனதை உடைக்கும். அந்த நபர் கொடுத்த வலியால் காதல் மீது பயம் உள்ளது" என்று கூறியுள்ளார்.