செங்கையில் தபால் ஓட்டு செலுத்திய 106 போலீசார்

52பார்த்தது
செங்கையில் தபால் ஓட்டு செலுத்திய 106 போலீசார்
ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறை அலுவலர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், நேற்று நடந்தது.

செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுலர்களுக்கு, 631 தபால் ஓட்டுகளும், தாம்பரம் காவல் ஆணைய ரக காவல்அலுவலர்களுக்கு, 2, 800 தபால் ஓட்டுகள் உள்ளன.

இந்த மையத்தில், தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும்செங்கல்பட்டு போலீசார், நேற்று தபால் ஓட்டு செலுத்தினர்.

இதில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கு, 28 ஓட்டுகளும், மற்ற லோக்சபா தொகுதிக்கு 78 ஓட்டுகள் என, 106 ஓட்டுகள் பதிவாகின.

இதைத் தொடர்ந்து, இன்றும் தபால்ஓட்டுப்பதிவுநடக்கிறது. "

தொடர்புடைய செய்தி