ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம்

50பார்த்தது
ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, சிறப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம், அந்தந்த தாலுகாக்களில் நடக்கிறது.

கீழ்கண்ட கிராமங்களில், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து, தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.

ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி