செங்கல்பட்டு தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் நல சங்கம் சார்பாக மின்சார உயர்வு கட்டணத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் நலசங்கம் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து வெல்டிங் தொழிலாளர்கள் மின்சார கட்டணம் உயர்வால் பல்வேறு பாதிப்புகளை பெற்று வருகின்றனர்.
பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வெல்டிங் தொழில் செய்யும் அனைவருக்கும் மின்சார கட்டணம் மானிய விலை வழங்கிட வேண்டும், இரும்பு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மின் கட்டண மற்றும் ஜிஎஸ்டி வரி உயர்வையும் திரும்ப பெற கோரி கோரிக்கைகளை வலியுறுத்தி வெல்டிங் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.