செங்கல்பட்டு அருகே ராணுவம் துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் லாஞ்சர் சுடும் தளத்தில் உதிரிபாகங்களை பொறுக்கி விற்பனை செய்து வரும் நிலையில் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி உடைத்த போது வெடித்தது. இதில் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் ஆர்பிஎப் சி ஆர் பி எப் உள்ளிட்ட மத்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள் இந்த அனுமந்தபுரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் ராணுவத்தினர் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் என இலக்குகளை நோக்கி சுட்டு அவர்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் இரண்டு கிலோ மீட்டரில் இருந்து சுடும் ராக்கெட் லாஞ்சர்கள் மலையில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்க வேண்டும்.
இதேபோல் வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு கையறிக்கொண்டு போன்றவற்றிற்கு பிளைன்ட் பாம் என்று அழைக்கப்படுகிறது அவற்றை இப்பகுதியில் உள்ளவர்கள் கைப்பற்றி தங்களது முயற்சியில் உடைத்து அதையும் காசாக்கி வருகின்றனர்.
அப்பொழுது அனுமந்தபுரம் பகுதியில் வசிக்கும் கோதண்டன் வயது 52 என்பவர் வெடிக்காத ராக்கெட் லாஞ்சரை எடுத்துச் சென்று தான் வைத்திருந்த கத்தியால் உடைத்த போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது கோதண்டன் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.