பெண் குத்தி கொலை; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

52பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கீழ்நீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிதாஸ் இவரது மனைவி தேசம்மாள் (40) இவர் இந்த கிராமத்தில் தேசிய ஊரக 100 நாள் வேலை திட்ட வேலையின் மேற்பார்வையாளராக இருந்து வருகின்றார்.

இதே செய்யூர் அருகே தண்டரை கிராமம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சபாபதி (67) இவர் தனது உறவினர்கள் மூன்று பேர் வேலைக்கு வராமல் வேலைக்கு வந்தது போல் வருகை பதிவேட்டில் பதிவு செய்து சம்பளம் வழங்க வேண்டும் ஆபாசமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு தேசம்மாள் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சபாபதி மறைத்து வைத்திருந்த கத்தியை தேசம்மாளின் மார்ப்பு பகுதியில் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இரத்த வெள்ளத்தில் இருந்த தேசம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தேசம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கு குறித்து உயிரிழந்த தேசம்மாள் அக்கா மகன் அருண்குமார் (25) கடந்த 2016 ஆம் ஆண்டு கொடுத்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சபாபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி