சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பக்கத்தில் சென்னை மாநகராட்சி 194வது பெண் மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா ஏற்பாட்டில் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். அரவிந்த் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மகளிர் தின விழாவில் சிறுமிகளின் நடனம், பதரநாட்டியம் கலைகட்டியது.
பள்ளி சிறுமி சினிமா பாடலுக்கு ஆடிய நடனத்தை அமைச்சர், எம்பி கைதட்டி ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் பெண்களுக்காக திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாகவும் கலைஞர் ஆட்சியிலும், திராவிட மாடல் ஆட்சியிலும் பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாகவும் பட்டியலிட்டு பேசினார்.