நெல்லிக்குப்பம் -- கொண்டங்கி சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தல்

165பார்த்தது
நெல்லிக்குப்பம் -- கொண்டங்கி சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தல்
திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நெல்லிக்குப்பம் கிராமத்தில் இருந்து, கொண்டங்கி வழியாக மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. இச்சாலை வழியாக, நெல்லிக்குப்பம், அம்மாபேட்டை, கீழூர், தர்மாபுரி, கொட்டமேடு, கொண்டங்கி, சிறுங்குன்றம், மருதேரி, மேலையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த சாலை, தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, தற்போது மண் சாலையாக காட்சி அளிக்கிறது. இச்சாலை அருகே, மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றான கொண்டங்கி ஏரி உள்ளது. மழைக்காலத்தில், ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர், மேற்கண்ட நெல்லிக்குப்பம் - கொண்டங்கி சாலை குறுக்கே அமைந்துள்ள குறுகிய தரைப்பாலத்தின் வழியாக செல்லும். வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும்போது, சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு, சாலையை கடந்து வெள்ள நீர் செல்லும். இதனால், அப்போது சாலை போக்குவரத்து துண்டிக்கப்படும். இச்சாலையை பயன்படுத்தும் கூற்றியுள்ள பல கிராம மக்கள், 10 கி. மீ. , துாரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். வெள்ளப்பெருக்கு குறைந்த பின், அவ்வப்போது தற்காலிகமாக மண் கொட்டி சாலையை சீரமைப்பர். எனினும், நிரந்தர தீர்வாக, நெல்லிக்குப்பம் -- கொண்டங்கி சாலையில், பழைய குறுகிய தரைப்பாலத்தை அகற்றி, மூன்று இடங்களில் உயர்மட்ட பாலம் அமைத்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, சுற்றியுள்ள 10 கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி