செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் இன்றி இலவசமாக அனுப்பி வருகின்றனர்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் இன்று முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ரசிகர்கள் என ஏராளமானோர் விழுப்புரம் நோக்கி அதிகப்படியாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் செல்வதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சுங்கட்சாவடியில் கட்டணமில்லாமல் வாகனங்களை காவல்துறையினர் இலவசமாக அனுப்பி வருகின்றனர்.