100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மீண்டும் வழங்க வலியுறுத்தல்

57பார்த்தது
100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மீண்டும் வழங்க வலியுறுத்தல்
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் துவங்கப்பட்டதில் இருந்து, கிராம ஊராட்சிகளில் உள்ள ஏரி, குளம், வரத்து கால்வாய் துார்வாருதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த ஏப்ரல், மே மாதங் களில், பார்லிமெண்ட்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. அதனால், நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன.

ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிகள்முடிவு பெற்று ஒருமாதமாகியும், கிராம ஊராட்சி பகுதிகளில், நுாறு நாள் வேலை திட்ட பணிகள், அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது, அச்சிறுபாக்கம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், நுாறு நாள் வேலை திட்டத்தின் வாயிலாக, குளம் வெட்டும் பணிகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன.

இதில், 30க்கும் குறைவான பணியாளர்களே ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால், ஊராட்சி தலைவர்களுக்கு சாதகமான நபர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்படுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக, ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையே, சமூக படிநிலைகள் குறித்து, தேவையற்றவீண் விவாதங்கள்ஏற்படுகின்றன.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ், அனைத்துஅட்டைதாரர்களுக்கும் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி