செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதிக்கு, சில தினங்களுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி வருகை தந்தார். அவரை வரவேற்கும் விதமாக, பல்வேறு இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் முன் உள்ள பேருந்து நிறுத்தத்திலும், பெரிய அளவிலான விளம்பர வரவேற்பு பேனர் வைக்கப்பட்டது.
இந்த இடத்தில், பேருந்துக்காக பயணியர் அதிக அளவில் காத்திருப்பது வழக்கம். மாலை நேர திடீர் காற்று, மழையில் பயணியர் மீது சாய்ந்து விழுந்து, விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, பயணியரின் நலன் கருதி, ஆபத்தான நிலையில் உள்ள அந்த பேனரை அகற்ற, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இன்று(செப்.12) கோரிக்கை விடுத்துள்ளனர்.