சேதமான மேல்நிலை தொட்டி ஒழலுாரில் விபத்து அபாயம்

56பார்த்தது
சேதமான மேல்நிலை தொட்டி ஒழலுாரில் விபத்து அபாயம்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஒழலுார் ஊராட்சியில், பல ஆண்டுகளாக இயங்கி வரும், 60, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, பராமரிப்பின்றி உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தான், 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகியும், சீரமைக்காமலேயே தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதிவாசிகளுக்குபல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

அது மட்டுமின்றி, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலை உள்ளதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

எனவே, இந்த குடிநீர் தொட்டியை மாற்றி, புதிதாக குடிநீர் தொட்டி அமைத்து, சுகாதாரமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி