திருக்கழுக்குன்றத்தில் பல் மருத்துவ மாணவன் தற்கொலை

71பார்த்தது
திருக்கழுக்குன்றம் அருகே பல் மருத்துவ மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை, திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை.

திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சகாய ரோஜஸ் நிவின் வயது 23, இவர் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் இயங்கி வருகின்ற தனியார் பல் மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இறுதியாண்டு பல் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற பின்னர் விடுதியில் தங்கி இருக்கும் சக மாணவர்களுடன் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடி விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பிய நிலையில், இரவு அனைவரும் உணவருந்தி விட்டு தூங்கிய பின் சகாயரோஜஸ் நிவின் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப் போட்டு தொங்கிய நிலையில் இறந்துள்ளார். திடீரென இதைப் பார்த்த சில மாணவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த தகவலின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து சகாயரோஜஸ் நிவின் ஏன்? எதற்காக? தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல் மருத்துவ படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி