கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்ன ஆர்ப்பாட்டம்.


தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது

அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை கிராம
உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கிகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமையில் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளருக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், வருவாய்த்துறையில் ஏற்படுகின்ற காலி பணியிடங்களில் கல்வி தகுதி அடிப்படையில் அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பதிவு எழுத்தர், உள்ளிட்ட பதவிக்கு பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் உதவியாளருக்கு 25% பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்ன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ஏழுமலை வரவேற்பு வழங்கினார்.

சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி