அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு அழைப்பு

56பார்த்தது
அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு அழைப்பு
செங்கல்பட்டில், அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 போட்டி தேர்வுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளது.

தேர்வு, வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் என, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக, போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், ஜன. , முதல் வாரத்தில் துவக்கப்பட உள்ளன.

மேலும் விபரங்களுக்கு, https: //tnpsc. gov. in இணையதள முகவரியை பயன்படுத்தலாம். புதிய கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி