இடிந்து விழும் நிலையில் இருந்த மேல்நிலை தொட்டி அகற்றம்

82பார்த்தது
இடிந்து விழும் நிலையில் இருந்த மேல்நிலை தொட்டி அகற்றம்
சித்தாமூர் அருகே, சிறுமயிலுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

குடியிருப்புப் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன், 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் மேல்நிலைத் தேக்கத் தொட்டி சேதமடைந்து, தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் விரிசல் அடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தன.

அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், மாவட்ட நிதிக்குழு மானியத்தில் இருந்து, 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, தற்போது பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அகற்றப்படாமல், அபாயத்துடன் இருந்தது. மழைக்காலத்தில் பலத்த காற்று வீசும்போது, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி குடியிருப்புகள் மீது சாய்ந்து, விபத்து ஏற்படும் அபாய நிலை இருந்தது.

இது குறித்து, செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, குடியிருப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் இருந்த பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நேற்று இடித்து அகற்றப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி