உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில் இருந்து, அழிசூர் வழியாககளியாம்பூண்டி செல்லும் சாலை உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன் இச்சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இச்சாலையில் அழிசூர் கிராமம் அருகே, தார் பிளாண்ட் எதிரே சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சீரமைப்பு பணி மேற்கொண்ட சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், மின்வசதி இல்லாத இச்சாலையில், இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் ஏற்பட்டுள்ள சாலைப் பகுதியில் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.
எனவே, அழிசூர் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.