மத்திய அரசு கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் முட்டைகள்

79பார்த்தது
மத்திய அரசு கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் முட்டைகள்
செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்தாண்டு பெய்த கனமழை காரணமாக, மாவட்டத்தில் 75, 000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.

அவை, கடந்த பிப். , கடைசி வாரம் முதல், மாவட்டம் முழுதும் நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில், மாவட்டத்தில் 102 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையம் வாயிலாக, 28 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளன.

போதுமான தார்ப்பாய் வசதிகள் இன்றி, திறந்தவெளியில் உள்ளது. திடீரென கோடை மழை பெய்தால், பல ஆயிரக்கணக்கான மூட்டைகள் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம், கொள்முதல் செய்யப்பட்ட நெல் முட்டைகளை, சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் சென்று பாதுகாக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், கடந்த 20 நாட்களாக நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கான பணம், வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி