காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான மாசி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. உற்சவத்தையொட்டி தினமும் காலை, மாலையில், காமாட்சியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.
அதன்படி ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று காலை, தங்க பல்லக்கில், மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
இதில், காஞ்சிபுரம் யாதவ சத்திரி பரிபாலன சபை நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சார்பில், கிழக்கு ராஜ வீதி, கோகுலம் திருமண மண்டபத்தில், மண்டகபடி உற்சவம் நடந்தது. இதில், அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடந்தன. இரவு, நாக வாகன உற்சவம் நடந்தது.
இன்று காலை முத்து சப்பரமும், இரவு தங்க கிளி வாகனம் நடக்கிறது. இதில், ஒன்பதாம் நாள், பிரபல உற்சவமான பிப். , 23ல் இரவு வெள்ளி ரதம் உற்சவம் விமரிசையாக நடக்கிறது. "