புதர்மண்டிய வி. ஏ. ஓ. , அலுவலகம்

63பார்த்தது
புதர்மண்டிய வி. ஏ. ஓ. , அலுவலகம்
வாலாஜாபாத், கோபால் நாயுடு தெருவில், கிராம நிர்வாக அலுவலக கட்டடம் இயங்கி வருகிறது. இங்கு, ஏற்கனவே சிதிலமடைந்த சாவடி கட்டடமும் உள்ளது.

இந்த கிராம நிர்வாக அலுவலகத்திற்கு, அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை வாங்க செல்லும் விவசாயிகள் மற்றும் வருவாய் சான்றுகளை பெற பொது மக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது.

குறிப்பாக, கிராம நிர்வாக அலுவலகம் கட்டடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால், பகலில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

எனவே, வாலாஜாபாத் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தின் முன் புதர் மண்டிய செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.