உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி தீவிரம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், hand in hand தனியார் தொண்டு நிறுவனம், மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் பணி ஈடுபட்டனர் முன்னதாக மாமல்லபுரம் யோகா மையம் சார்பாக பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஓவியங்கள் வரைந்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் அதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னமான அர்ஜுனன் தபசு அருகே பிளாஸ்டிக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் தொழில் நிறுவனம் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த் ராவ், மற்றும் தூய்மை பணியாளர்கள் கல்லூரி மாணவர்கள் தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.