ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

59பார்த்தது
திருப்போரூர் எம்ஜிஆர் நகரில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது, கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம் பல்வேறு கேள்விகளுடன் முதல் கால பூஜை துவங்கியது, இன்று காலை இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து மூன்றாம் கால யாக பூஜையுடன் பல்வேறு வேள்விகள் முடிவுற்று யாகசாலையில் இருந்த புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று கோபுர விமானத்திற்கும் மூலவர் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு புனித நீரை ஊற்றியதை தொடர்ந்து நவகிரகங்கள், முனீஸ்வரன் திருக்கோவிலுக்கும் கலசத்தில் உள்ள புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர், அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி