செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலுக்கு இணையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்
இந்நிலையில், காலை முதல் கடுமையான வெயில் வாட்டிய நிலையில் பிற்பகலில் செங்கல்பட்டு, பரனூர், சிங்கபெருமாள்கோவில், பழவேலி,
வல்லம், ஒழலூர்,
ஆலப்பாக்கம்,
திம்மாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து சாலைகள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதன் காரணமாக, வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.