செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பத்திரப்பதி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி சரவணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வந்தவர்களிடம் லஞ்ச ஒழிசா திடீர் என்று சோதனை செய்தனர்.
இதில் வந்திருந்த பொது மக்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து அதற்கான காரணத்தையும் அதற்கான விளக்கத்தையும் கேட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். சிலர் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளுக்கு சரியான தகவல் சொல்லாத காரணத்தினால் அவர்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பத்தரவு பதிவு அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் பல்வேறு ஆவணங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறத.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது முழுமையான சோதனை முடிந்த பின்னரே அவர்கள் வைத்திருந்த பணத்திற்கு ஏற்ப விளக்கங்கள் கேட்டு பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். மேலும் சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தனர்.