கழிவுநீர் சாலையில் செல்வதால் பொதுமக்கள் அவதி

51பார்த்தது
திருப்போரூர் பேரூராட்சியில் கந்தசாமி கோவில் அருகே கழிவுநீர் சாலையில் செல்வதால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர் கோவிலின் அருகே கழிவுநீர் சாலையில் சென்ற வண்ணம் உள்ளது சாலையில் செல்வது கழிவு நீரா அல்லது மழை நீரா என்று கூட தெரியாமல் வாகன ஓட்டிகள் வேகத்துடன் செல்வதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாக்கடை நீர் பட்டு கோவிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது அதுமட்டுமின்றி வழிந்து ஓடும் கழிவுநீர் கோவில் குளத்தில் கலக்கும் நிலை உருவாகியுள்ளது இது குறித்து பேரூராட்சி ஊழியர்களிடம் கேட்டதற்கு இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை வருவாய் துறையினர் மண்ணை கொண்டு மூடிவிட்டனர் இல்லை என்றால் கழிவுநீர் சாலையில் செல்லாது அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என பதில் அளிக்கின்றனர் ஊழியர்களே இவ்வாறு மெத்தனமாக பதில் அளிப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர் இதனால் பாதிக்கப்படுவது கோவிலுக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் தான் அதனால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி