குன்றத்துார் ஒன்றியம், கெருகம்பாக்கம் ஊராட்சியில், வேணுகோபாலாசமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம், குடியிருப்புக்கு மத்தியில், குளம் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால், குளம் முழுதும் செடிகள் வளர்ந்து துார்ந்து போய் உள்ளது.
மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது; பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், கழிவுநீர் குட்டையாக மாறிவிட்டது.
கழிவுநீர் கலப்பதை தடுத்து, குளத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.