தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் களியனுாரில் விபத்து அபாயம்

56பார்த்தது
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் களியனுாரில் விபத்து அபாயம்
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் இருந்து, வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர், களியனுார், முத்தியால்பேட்டை வழியாக காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையுடன் இணையும் புறவழிச்சாலை உள்ளது.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், களியனுாரில் சாலையோரம் மின்தட பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள இரு மின்கம்பங்களுக்கும் இடையே செல்லும் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.

இச்சாலையில் எதிரெதிரே இரு கனரக வாகனங்கள் வரும்போது, சாலையோரம் ஒதுங்கும் வாகனம் மின்கம்பியில் உரசி, மின்விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, விபத்து ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மின்வாரியத்தினர் சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி