சித்தாமூர் பகுதிகளில் மாடுகள் திருட்டு அதிகரிப்பு

56பார்த்தது
தீபாவளி பண்டிகை நெருங்குவதால்
பட்டதாரி விவசாயி வளர்த்து வரும்
பசு மாடுகளை திருடிய நபர்கள்
மீது நடவடிக்கை எடுக்க விவசாயி
கோரிக்கை.

செங்கல்பட்டு மாவட்டம்
சித்தாமூர் ஒன்றியத்துக்குட்பட்ட
ஆர்காடு கிராமத்தில் வசித்து வருபவர் பட்டதாரி விவசாயி செந்தில்குமார்.

இவர் அப்பகுதியில் தனது சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் பத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு சுமார் ஏழு பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு மீதமுள்ள
மூன்று பசு மாடுகளை திருட முயற்சி செய்துள்ளனர் வருமா நபர்கள்.

அப்போது மர்ம நபர்கள்
பசுமாடு கட்டியிருந்த கொட்டகையில்
கயிறை கழட்ட முயற்சி செய்யும்போது
பசுமாடுகள் அம்மா என்று குரல் கொடுத்ததால்
அங்கு இருந்து மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

மேலும் தப்பிச்செல்ல முயற்சிக்கும் போது பசுமாடுகள் குரல் கொடுத்ததால்
பசுமாடுகளின் காது மற்றும் கழுத்து பகுதியில் கத்தியை கொண்டு வெட்டி
பசு மாடுகளுக்கு மயக்க மருந்து தெளித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனால் இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி