ஏரி புல்லை தீவைத்து எரிப்பதால்மாடுகளுக்கு தீவனம் தட்டுப்பாடு

51பார்த்தது
ஏரி புல்லை தீவைத்து எரிப்பதால்மாடுகளுக்கு தீவனம் தட்டுப்பாடு
காஞ்சிபுரம் மாவட்டம், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 85, 000க்கும் மேற்பட்ட ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த விவசாயத்தை நம்பி, 3. 17 லட்சம் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் ஆடு, மாடுகளுக்கு குறைவில்லாத தீவனம் கிடைத்து வந்தன.

கோடைக்கு பெரும்பாலான ஏரிகள், நெல் அறுவடை மற்றும் அறுவடை செய்த நிலங்கள் தரிசாக இருப்பதால், புல்லை காண்பது அரிதாக உள்ளது. உலர்ந்த புல்லையும் சிலர் தீ வைத்து எரிப்பதால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறுவாக்கம், சிறுவள்ளூர், ஏகனாபுரம், பரந்துார், விஷகண்டிகுப்பம், கூரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருக்கும் ஏரி புல்லுக்கு தீவைத்து எரித்திருப்பதால், தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால், ஆடு, மாடு வைத்திருக்கும் கால்நடை விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி