வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடுங்கள்: மோடி

82பார்த்தது
அனைவரும் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை கொண்டாடுங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மூன்றாவது கட்ட பொதுத் தேர்தலின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தலின் போது மக்கள் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். வெயிலிலும் மக்கள் திரண்டு வந்து வாக்களித்து வருகின்றனர். ஜனநாயகத்தில் வாக்குரிமை மிகவும் முக்கியமானது. நாட்டு மக்கள் அதிக அளவில் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த வேண்டும்,' என்றார்.

தொடர்புடைய செய்தி