சாலையில் சுற்றிய மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

56பார்த்தது
சாலையில் சுற்றிய மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
செங்கல்பட்டு வருவாய் கோட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகா பகுதிகளில், சாலைகளில் மாடுகள் உலா வருவதாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.

எனவே, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, கோசாலையில் அடைக்கவும், மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கொண்ட குழு அமைத்து, சப்- - கலெக்டர் நாராயணசர்மா உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, ஆலப்பாக்கம் ஊராட்சியில், செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரி மற்றும் குழுவினர், நேற்று பிடித்தனர்.

இதில், ஒரு மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து, முதல்முறை என்பதால் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மாடுகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அபராதம் விதித்து, கொண்டமங்கலம் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என, மாட்டின் உரிமையாளர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல், திருப்போரூர் பேரூராட்சி பகுதியில், சாலைகளில் சுற்றிய எட்டு மாடுகள் நேற்று முன்தினம் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி