தொழிற்சாலை சூப்பர்வைசர் துாக்கிட்டு தற்கொலை

63பார்த்தது
தொழிற்சாலை சூப்பர்வைசர் துாக்கிட்டு தற்கொலை
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அமிய பரிடா, 38; சூப்பர்வைசர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கம், மேலண்ட தெருவில் தங்கி இருந்தார்.

மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வடமாநில தொழிலாளர்களை வைத்து சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம், வீட்டின் உரிமையாளரின் மகன் ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, நான் மிகவும் மன விரக்தியில் உள்ளேன் என கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ் பக்கத்து வீட்டில் உள்ள பிரசாந்த் என்பவருக்கு தெரிவித்துள்ளார். பிரசாந்த், அமிய பரிடா வீட்டிற்கு சென்று பார்த்த போது, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி