ரயில் நிலையத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்

50பார்த்தது
ரயில் நிலையத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், பயணியர் வசதிக்காக, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், ஊரப்பாக்கம் மற்றும் வண்டலுார் ரயில் நிலையங்களுக்கு இடையில், தண்டவாளங்கள் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை கையகப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில், ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் வந்தனர்.

பேருந்து முனையம் அருகில் உள்ள சங்கரா பள்ளி எதிரில், ஜி. எஸ். டி. , சாலையில் இருந்து ஆதனுார் செல்லும் மேம்பாலத்தின் அருகில், தண்டவாளத்தை ஒட்டியவாறு அளவீடு செய்ய முயன்றனர்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த சிலர், எங்களுக்கு பட்டா உள்ளது. நாங்கள் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என, தெரிவித்தனர். மேலும், ரயில்வே துறை அதிகாரிகள், ஆவணங்களை எடுத்து வராததால், நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை.

இது குறித்து, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா கூறியதாவது:

வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் வர இருக்கிறது. ரயில்வே தண்டவாளம் அருகில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, ஏற்கனவே நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி