அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்தில் திமுக பாக முகவர்கள் மற்றும் பாக நிலை குழு உறுப்பினர்கள் கூட்டம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
காஞ்சி தெற்கு மாவட்டம் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கண்ணன் தலைமையில் அச்சரப்பாக்கம், தின்னலூர், கீழ் அத்திவாக்கம், பெரும்பேர்கண்டிகை ஆகிய பகுதிகளில் திமுக பாக முகவர்கள், பாக நிலைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொன்மலர் சிவக்குமார், பானுமதி ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர் சாரதிமணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு வரும் சட்ட மன்ற தேர்தலின் போது திமுகவின் வெற்றியை உறுதி செய்ய எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், அதிக அளவிலான உறுப்பினர்களின் சேர்க்கை சேர்ப்பது குறித்தும், கிராமங்கள் தோறும் திமுகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தேர்தலின் போது வெற்றியை உறுதி செய்யவேண்டும் என விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கோகுலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.