தமிழக அரசின், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்கள் துறை சார்பில், மாணவர்களிடையே சூழலியல் மனப்பான்மையை வளர்க்க ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில், காஞ்சிபுரம் வருவாய் மாவட்ட அளவில், நடப்பு ஆண்டுக்கான பேச்சு, ஓவியப்போட்டி, குப்பைகளற்ற சுற்றுச்சூழல், புவி வெப்பமும், காலநிலை மாற்றமும், வனவிலங்கு பாதுகாப்பு, பிளாஸ்டிக் எனும் பேரெதிரி போன்ற தலைப்புகளில் நேற்று போட்டி நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி போட்டியை துவக்கி வைத்தார். இதில், காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளியைச் சேர்ந்த 210 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற 90 மாணவ - மாணவியருக்கு, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காந்திராஜன், பள்ளி துணை ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வில்லியம் விஜயராஜ், திருவள்ளூர் மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தினகரன் ஆகியோர் செய்திருந்தனர். "