கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து இளைஞர் பலி

54பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நிவாஸ் (வயது 22). இவர் விளை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் திருப்போரூர் பகுதியில் இருந்து கூடுவாஞ்சேரி செல்வதற்கு நெல்லிக்குப்பம் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார்

அப்போது நெல்லிக்குப்பம் அருகே கூடுவாஞ்சேரியில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்ற கார் அதிவேகமாக சென்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடித்துடித்து உயிரிழந்தார்.

பின்பு விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக மாடு குறுக்கே வந்ததால் காரை வலது பக்கம் திருப்பினோம் என கார் ஓட்டுநர் தெரிவித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.!

தொடர்புடைய செய்தி