திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் கருணாநிதி வருகிறார்!

73பார்த்தது
திமுக முப்பெரும் விழாவில் கலைஞர் கருணாநிதி வருகிறார்!
செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஒன்றியம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கோவிலம்பாக்கம் பகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று(செப்.11) புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிற 17ம் தேதி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும் திமுக பவளவிழா, ஆண்டு முப்பெரும் விழாவில் கலைஞர் கருணாநிதி AI தொழில்நுட்பத்தில் முதல்வர் ஸ்டாலின் அருகில் வந்து அமர்வார் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ், ஒன்றிய சேர்மன் சங்கீதா பாரதிராஜன், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உட்பட நிராவாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி